இணையத்தளம் உருவாக்கிய பின் அந்த இணையத்தளம் தெரிய எடுத்துக்கொள்ளும் நேரம் தான் மிக முக்கியம்.
நம்
தளம் கணணியில் தெரிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடிப்பது போல்
ஐபோனில் தெரிவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்றும் எளிதாக
கண்டுபிடிக்கலாம்.
தற்போது அனைவரிடத்திலும் பிரபலமாகிவரும் ஐபோனில் நம் தளம் தெரிய எவ்வளவு
நேரம் எடுக்கிறது என்று இணையத்தளம் உருவாக்கியவரிடம் கேட்க வேண்டாம் நாமே
தெரிந்து கொள்ளலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நம் இணையத்தளத்தின் பெயர் மற்றும் ஐபோன் மொடல்
என்ன என்பதையும் தேர்ந்தெடுத்து Run Performance Test என்ற பொத்தானை
சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த ஐபோனில்
நம் தளம் தெரிவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்ன என்பதை துல்லியமாக
காட்டுகிறது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு பக்கமும் சராசரியாக எவ்வளவு KB(Size) எடுத்துக்
கொள்கிறது என்பதையும் காட்டுகிறது. புதிதாக இணையத்தளம் உருவாக்க
விரும்புபவர்கள் ஐபோனிலும் தங்கள் தளம் முழுமையாக வேகமாக தெரிந்தால் மேலும்
பல மக்களை ஈர்க்கலாம்.
இணையதள முகவரி
0 comments:
Post a Comment