Saturday, December 31, 2011

கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கு

மனித உடலில் வெட்டினாலும் வளரக்கூடிய ஒரே உறுப்பு கல்லீரல் தான். அதே போல் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் உச்சபட்ச சாதனையாக இருப்பது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தான்.
இதயம், கண், நுரையீரல், சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பும் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்கின்றன. ஆனால் கல்லீரல் மட்டும்தான் உணவை ஜீரணம் செய்வதில் ஆரம்பித்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது வரை, 3,000-க்கும் அதிகமான பணிகளை செய்து கொண்டே இருக்கிறது.

குடிப்பழக்கத்தாலும், வைரஸ் கிருமிகளாலும் பாதிக்கப்படும் கல்லீரல் 80 சதவிகிதம் கெட்டுப்போன பிறகு தான் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதையே நம்மால் அறிய முடியும். இது நமக்குத் தெரியவரும் போது கல்லீரல் பிரேக் டவுன் ஆகும் நிலையில் இருக்கும்.
கல்லீரல் புற்றுநோய், வயிற்றில் நீர் கோத்து வயிற்றைப் பானை போல் மாற்றி விடுவதோடு கால் வீக்கம், லிட்டர் கணக்கில் ரத்த வாந்தி, சுய நினைவு இழப்பு, நடக்கவே முடியாத நிலை எனப் படிப்படியாக மனிதனை முடக்கிவிடும்.
ஆகையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றே நிரந்தரத் தீர்வு.
கல்லீரல் பிரச்னை வராமல் இருக்க அதிகக் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். புரதம், மாவுச் சத்து, வைட்டமின் மற்றும் காய்கறி, பழ வகைகளைச் சாப்பிடுவது கல்லீரலைக் காக்கும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

0 comments:

Post a Comment