புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள்
பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப்
மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை
செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது
புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர்
போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து
எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு
டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://simplephotoshop.com/photoshop_tools/
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
போட்டோஷாப்-ல் எந்த டூலைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை சொடுக்கினால்
போதும் அந்த டூலின் பயன் என்ன என்பது முதல் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்
என்றும் அதற்கான Short Cut key என்ன என்பது வரை அத்தனையும் விரிவாக
எடுத்துக் கூறுகிறது.போட்டோஷாப் மென்பொருளை கற்றுக்கொள்வது கடினம்
என்றும் சில மாதங்கள் வரை ஆகலாம் என்று நினைக்கும் அனைவரும் ஒவ்வொரு
டூலையும் சொடுக்கி அதைப்பற்றி தெரிந்து கொண்டு போட்டோஷாப் பயன்படுத்தினாலே
அனைவரும் போட்டோஷாப்-ல் திறமையுள்ளவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு
போட்டோஷாப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
0 comments:
Post a Comment