Sunday, January 22, 2012

பேஸ்புக்கி​ல் உங்கள் Profile IDஐ கண்டுபிடிப்​பதற்கு

தற்போதைய காலகட்டத்தில் மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் பேஸ்புக் ஆகும்.
பேஸ்புக்கில் பயன்படுத்தப்படும் பயனர் பெயர்கள்(User name) இலக்கங்களால் பிரதியிடப்பட்டிருக்கும். இது மொத்தமாக பதினைந்து இலக்கங்களை கொண்டிருந்த போதிலும் உங்கள் பேஸ்புக்கின் பக்க இலக்கமானது பன்னிரண்டு இலக்கங்களை கொண்ட எண்ணாகும்.

இப்பொழுது உங்களுடைய Profile ID ஐ தெரிந்துகொள்வது எவ்வாறு என்று பார்ப்போம்.
1. உங்களது பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி பேஸ்புக் பகுதிக்கு செல்லுங்கள்.
2. அதிலிருந்து உங்கள் Profile பக்கத்திற்கு செல்லுங்கள்.
3. இப்பொழுது மேலுள்ள Address Bar பாருங்கள்(URL). அதில் பின்வருமாறு காணப்படும். http://www.facebook.com/profile.php?id=123456789.
இதில் 123456789 என்று காணப்படுவதே உங்கள் Profile ID ஆகும்.
ஆனால் சிலரது Profile IDக்கு பதிலாக பயனர் பெயரே காணப்படும். எனவே இங்குதான் சற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டும். அதாவது
1. உங்களது பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை பயன்படுத்தி பேஸ்புக் பகுதிக்கு செல்லுங்கள்.
2. இப்பொழுது Address Barஐ பின்வரும் URL ஆல் பிரதியிடுக https://graph.facebook.com/
3. பிரதியிட்ட URL ல் காணப்படும் "/" குறிக்கு பின்னால் உங்களது பயனர் பெயரை இட்டு(உதாரணம்:- https://graph.facebook.com/tamilwin) "Enter Key"ஐ அழுத்தவும்.
அப்போது தோன்றும் பக்கத்தில் முதலாவது வரியில் காணப்படும் தொடரிலக்கமே உங்கள் Profile ID ஆகும்.

0 comments:

Post a Comment