Sunday, February 26, 2012

இணையத் தொடர்பு இல்லாமல் போனில் பேஸ்புக்

போன் எதுனா இருக்கா உங்ககிட்ட? இனி அது போதும் முகப் புத்தகத்தில் முழுக. ஆம் இணையம் இன்றி பயன்படுத்தலாம் முகப்புத்தகத்தை. முழுக்க முழுக்க மிக எளிதான வழிதான் தேவை இதற்கு.அட வெறும் 1100 இருந்த போதுமுங்க.




இது இந்தியாவுக்கு மட்டும் இப்போது. முதலில் உங்கள் அலைபேசியில் இருந்து *325# அல்லது (or *fbk#). இதற்கு உங்களிடம் இணையத் தொடர்பு தேவை இல்லை. கட்டணம் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும்.

கீழே உள்ள படங்களை பாருங்கள் புரியும்.



        
Facebook India  ஆனது Fonetwish உடன் இணைந்து இந்த வசதியை இந்தியர்களுக்கு வழங்குகிறது. 
முதலில் உங்கள் User name, Password என்று வரிசையாக செல்ல வேண்டும். இந்த வசதி இப்போது ஏர்டெல், ஏர்செல்,ஐடியா, டோகோமோ நிறுவனப் பயனர்களுக்கு இது கிடைக்கும். 

இதற்கு ஒரு நாளுக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே போதும் என்று சொல்லப்பட்டு உள்ளது. (தமிழன் இலவசமா எதிர் பார்ப்பான்னு தெரியல விடுங்க). இதன் மூலம் எளிதில் சாட் செய்யலாம், உங்கள் செய்திகளை பகிரலாம். 

இணையத் தொடர்பு இல்லாத நேரங்களில் இது பெறும் உதவி செய்யும். ஆபத்தான நேரங்களில் கூட இது உதவலாம். மிக அருமையான வசதி. பயன்படுத்தி பார்ப்போமே. 
அட அட நீங்க பாடுற பாட்டு என் காதுல கேக்குதே. 
அப்படி போடு போடு போடு அசத்தி போடு..... ஹி ஹி ஹி

0 comments:

Post a Comment