Wednesday, June 15, 2011

கணணியில் அனைத்து வகையான கோப்புகளையும் ஓபன் செய்வதற்கு


நம்முடைய கணணியில் ஒரு சில கோப்புக்களை ஓபன் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட கோப்புக்களை மட்டுமே ஓபன் செய்ய முடியும்.

சில போர்மட் கோப்புக்களை ஓபன் செய்ய வேண்டுமானால் அதற்கான மென்பொருள் கட்டாயம் நம் கணணியில் இருந்தால் மட்டுமே நாம் அதை திறக்க முடியும்.

இதற்காக நாம் ஒவ்வொரு கோப்புக்களை ஓபன் செய்வதற்கும் அந்தந்த மென்பொருள் இணைப்பது தேவையில்லாத வேலை. இதனை போக்கவே ஒரு ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:

1. இந்த மென்பொருள் மூலம் 70+ வகை கோப்புக்களை சுலபமாக ஓபன் செய்து கொள்ளலாம்.

2. .vcf , .srt, .sql போன்ற அறிய வகை கோப்புக்களையும் இதில் ஓபன் செய்து கொள்ளலாம். டோரென்ட் கோப்புக்களையும் இதன் மூலம் ஓபன் செய்ய முடியும்.

3. இதன் மூலம் பிடிஎப் கோப்புக்களை பிரிண்ட் எடுக்கவும் முடியும்.

4. .zip, .rar வகை பைல்களை Extract செய்யும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

5. மைக்ரோசாப்டின் வேர்ட் கோப்புக்களையும், பவர் பாய்ன்ட் கோப்புக்களையும் கூட இந்த மென்பொருள் மூல ஓபன் செய்து கொள்ளலாம்.

6. இந்த மென்பொருள் மூலம் இந்த வகை கோப்புக்களை ஓபன் செய்து பார்க்க மட்டும் தான் முடியும். இதில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது.



தரவிறக்க சுட்டிhttp://www.freeopener.com/

0 comments:

Post a Comment