கணணியில் சில நேரங்களில் நம்முடைய கோப்புக்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும்.
அந்த கோப்பு பழுதாகி விட்டால் நாம் அந்த கோப்பில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய கோப்புக்கள் பழுதாக சில காரணங்கள் நம்முடைய கணணியில் வைரஸ் புகுந்து முக்கியமான கோப்புக்களை அழித்து விடும்.
எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில்நுட்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான கோப்புக்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின்பு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் Browse பட்டhttp://www.blogger.com/img/blank.gifனை அழுத்தி உங்களின் பழுதான கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பழுதான கோப்பை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Start Repair என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய கோப்பு ரிப்பேர் ஆகா தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய கோப்பு திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த மென்பொருளால் குறிப்பிட்ட கோப்புக்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான கோப்பை அனுப்பினால் அவர்கள் அந்த கோப்பை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.
0 comments:
Post a Comment