Tuesday, July 5, 2011

இந்தியாவில் அறிமுகமாகும் சம்சங் கேட் 222

தொடக்க நிலை மொபைலாகத் தான் வடிவமைத் துள்ள சேட் 222 போனை, விரைவில் இந்தியாவில் சாம்சங் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே அறிமுகமான சேட் வகை மொபைல் போன்களைப் போலவே, இதிலும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக் கான இணைப்பு மற்றும் மின்னஞ்சல் சேவைகளுக்கு சப்போர்ட் வழங்கப் பட்டுள்ளது. இதில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களுக்கும் அழைப்பு வந்தால், தற்காலிகமாக நிறுத்திப்
பேசும் வசதியும் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான சாம்சங் சேட் 322 மற்றும் 335 ஆகியவை ஒரு சிம் இயக்க போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் சேட் 222 மொபைலில் 2.2 அங்குல திரை, வீடியோ பதியக்கூடிய விஜிஏ கேமரா, முழுமையான குவெர்ட்டி கீ போர்டு ஆகியன தரப்பட்டுள்ளன. போன் பிளாக் பெரி போன்களைப் போலத் தோற்றம் கொண்டுள்ளது. எப்.எம். ரேடியோ, DNSe ஒலி இயக்கம் கொண்ட ஸ்டீரியோ மியூசிக் பிளேயர், இன்டர்நெட் எச்.டி.எம்.எல். பிரவுசர், 45 எம்.பி. நினைவகம், தொடர்ந்து 11.5 மணி நேரம் மின்சக்தி வழங்கக் கூடிய 1000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகும்.
இதன் அதிக பட்ச விலை ரூ.3,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment