Tuesday, July 5, 2011

தொழில் நுட்பம்

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க்
அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
MMC Multimedia Card: பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்து வதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.
Mirror Site: ஒரு வெப் சைட் அல்லது எப்.டி.பி. சைட்டின் டூப்ளிகேட், அதாவது நகல், சைட். இதனால் முதன்மையான வெப்சைட் டேட்டா வரவால் தடுமாறுகையில் இந்த மிர்ரர் சைட் உதவிக்கு வரும். இலவச புரோகிராம் டவுண்லோட்களை வழங்கும் வெப்சைட்டுகள், மாணவர் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வெப்சைட்டுகள் தங்களின் தளங்களில் ஹிட் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் இது போன்ற மிர்ரர் சைட்களைப் பயன்படுத்துகின்றனர்.
Event Handler: ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிற தல்லவா! அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment