ஆவாரையின் அனைத்து பாகங்களுக்குமே மருத்துவ குணம் உள்ளது.
ஆவாரை, இலை, பூ, காய், பட்டை, வேர் - இவை ஐந்தையும் சூரணமாக்கி, அதில் 3 பங்கு எடுத்துக் கொள்ளவும்.
இதேபோல், கோரைக்கிழங்கு சூரணம் ஒரு பங்கு, கிச்சிலி கிழங்கு சூரணம் ஒரு
பங்கு கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக
இதனை தேய்த்துக் குளித்துவர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் தீரும்.
தேமல், சொறி, தினவு போன்ற சரும பாதிப்பு இருப்பவர்களும் இதனைப்
பயன்படுத்தி குளிக்கலாம். இவ்வாறு குறித்து வர சருமம்
புதுப்பொலிவு பெறும்.
ஆவாரை இலையுடன் பூவரச மர வேர்ப்பட்டை, சிறிது உப்பு சேர்த்து அரைத்து அதை
தண்ணீரில் கலந்து குளித்து வர, உடலில் ஏற்படும் அரிப்பு குணமாகும்.
0 comments:
Post a Comment