Wednesday, July 6, 2011

பி‌த்த‌ உடலு‌க்கு இ‌ஞ்‌சி ந‌ல்லது

இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து, தினமும் ஒரிரு துண்டுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தம் தணியும். வயிறு சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும்.


இஞ்சியுடன் துளசி இலையை, சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கி, நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.

இஞ்சி, ஏலக்காய் உள்ளிருக்கின்ற அரிசி, வெல்லம் - இவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி, பாலில் கலந்து குடித்து வர அடங்காத தாகம் அடங்கும்.

இஞ்சிச் சாறு, சங்குப்பூ இலைச் சாறு, தேன் சம அளவு கலந்து குடித்து வர இரவு நேரத்தில் உண்டாகின்ற மிகுதியான வியர்வை தணியும்.

சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பி விட குரல் கம்மல், தொண்டைப்புண் குணமாகும்.

0 comments:

Post a Comment