Wednesday, July 6, 2011

தண்டுக்கீரையின் உடல் நலப் பயன்கள்

தண்டுக் கீரையில் நாம் பொதுவாக இரு வகைகளைப் பார்க்கிறோம். ஒன்று வெளிர் பச்சை நிறமுடையது, மற்றொன்று சிவப்பு நிறம் உடையது. இதில் சிவப்பு நிறக் கீரை சுவை மிக்கது என்று நாம் அறிவோம், அது உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.



குடல் புண், அல்சர் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு மாதவிடாய் காலக் கட்டம் மிகவும் வேதனை தருவது. அதிலும் குறிப்பாக வலி நிறைந்த மாதவிடாயாக இருந்தால் சிவப்பு நிறத் தண்டுக்கீரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் கருப்பை கோளாருகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது.

தண்டுக்கீரை வகைகளில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது. இதனால் மூல நோய் உள்ளவர்கள் இதனை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment