Thursday, July 7, 2011

கர்ப்ப காலத்தில் சிறிய அளவு மது அருந்துவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது: ஆய்வில் தகவல்

கர்ப்ப காலத்தில் மிகச்சிறிய அளவு மது அருந்துவதால் குழந்தைக்கு பாதிப்பு வராது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கோப்பை மட்டுமே ஒயின் அருந்தலாம். இப்படி மிகக் குறைந்த
அளவில் மதுபானம் அருந்துவதால் குறைப் பிரசவ அபாயமோ சிசு வளர்ச்சியில் குறைபாடோ ஏற்படாது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக உலகம் முழுவதும் 36 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கர்ப்ப காலத்தில் மது அருந்தும் போது நிகழ்வுகள் குறித்து நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்தனர். இந்த ஆய்வின் படி முடிவு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்ப்பக்கால பெண்கள் சிறிய அளவு மது அருந்துவதை கூட தவிர்க்க வேண்டும் என உடல் ஆரோக்ய துறை அறிவுறுத்துகிறது. டொரண்டோவில் உள்ள பழக்க அடிமை மற்றும் மன நல ஆரோக்ய ஆராய்ச்சி மைய நிபுணர்கள் கூறுகையில்,"தினமும் 10 கிராம் ஆல்கஹால் அருந்துவதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு வராது" என கூறுகிறார்கள்.
இந்த அடிப்படையில் பார்த்தால் பெண்கள் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு கோப்பை அல்லது இரண்டு கோப்பை ஒயின் அருந்தலாம்.
அரை கோப்பைக்கு மேல் தினமும் ஆல்கஹால் அருந்தினால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தும் என மகப்பேறு தொடர்பான இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

0 comments:

Post a Comment