தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால் ஆயுட்காலத்தில் 3 ஆண்டுகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தினமும் 30 நிமிடம் பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என பிரிட்டனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தினமும் 6 மணி நேரம் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து படம் மற்றும்
நிகழ்ச்சிகளை பார்ப்பதால் ஆயுட்காலத்தில் 5 ஆண்டுகள் குறைகின்றன என்று
பிரிட்டிஷ் பத்திரிக்கை இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 150 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் அரசு சமீபத்தில் பயிற்சி ஆலோசனையை அறிவித்து இருந்தது.
15 நிமிடத்திற்கு மேல் தினமும் கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்யும் போது
மரண காரணிகள் அபாயத்தை மேலும் நான்கு சதவீதம் குறைக்கும் என தைவான் தேசிய
சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சீனா மருத்துவ பல்கலைகழகம்
கண்டறிந்துள்ளன. தைவான் ஆராய்ச்சி முடிவுகள் லான்செட் இதழில்
வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலிய ஆராய்ச்சி முடிவுப்படி நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பாக
உட்கார்ந்து இருந்தால் ஆயுட்காலம் குறையும் என எச்சரித்து உள்ளது. சிறு
உடல் அசைவுப் பயிற்சிகள் அவசியம் என மேலும் அறிவுறுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment