Sunday, August 21, 2011

ரத்த அழுத்த நோய் ஏற்பட வைரஸ் கிருமிகளே காரணம்: ஆய்வில் தகவல்

மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் ரத்த அழுத்தம் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த நோய்க்கு பொதுவான வைரஸ் கிருமிகளே காரணம் என தெரியவந்துள்ளது.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாயோயங் இருதய நோய் ஆஸ்பத்திரியின் டாக்டர் யங் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் மனித உடலில் உள்ள சைடோமெகலோ என்ற வகை வைரஸ் கிருமிகளுக்கும், உயர் ரத்த அழுத்த நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வைரஸ் கிருமிகள் தாக்குதலினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது.
இந்த வைரஸ் கிருமிகளை தெளிவாக கண்டுபிடிப்பதன் மூலம் அதற்கான மருந்து மாத்திரைகளை கண்டுபிடிக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரத்த அழுத்த நோயை மிக எளிதாக குணப்படுத்த முடியும் என்றும் கூறி உள்ளனர்.

0 comments:

Post a Comment