சமூக
இணைய தளங்களில் முக்கிமானது பேஸ்புக் தளம். பேஸ்புக்கில் இருக்கும்
வசதிகளை போன்று பல தளங்கள் கொடுத்தாலும் வாசகர்களுக்கு இந்த தளத்தை விட்டு
வெளியே வர மனமே இல்லை. அந்த அளவிற்கு பேஸ்புக் தளம் வாசகர்களிடையே
முற்றிலும் பரவி உள்ளது. மற்றும் இணைய வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தாத
இமாலய சாதனையை பேஸ்புக் தளம் நிகழ்த்தி உள்ளது. இந்த
ஒரு மாதத்தில் மட்டும் பேஸ்புக் தளம் 1ட்ரில்லியன் Pageviews பெற்று யாராலும் அசைக்க முடியாத சமூக தளம் என்று மீண்டும் நிருபித்து காட்டியுள்ளது.
ஒரு மாதத்தில் மட்டும் பேஸ்புக் தளம் 1ட்ரில்லியன் Pageviews பெற்று யாராலும் அசைக்க முடியாத சமூக தளம் என்று மீண்டும் நிருபித்து காட்டியுள்ளது.
இந்த
மாதத்திற்கான அதிகம் பார்க்க பட்ட தளங்களின் அறிக்கையை கூகுள் தளம்
வெளியிட்டது. எப்பவும் போல பேஸ்புக் தளம் தான் முதலிடத்தை
பிடித்துள்ளது. அதற்க்கு அடுத்த இடத்தில் யூடியுப் தளமும் மூன்றாவது
இடத்தை யாஹூ தளமும் பிடித்துள்ளது. மற்ற தளங்களின் அறிக்கையை வெளியிட்ட
கூகுள் அதன் சொந்த தளங்களின்(ஜிமெயில்,பிளஸ்,தேடியந்திரம்) அறிக்கையை
வெளியிட வில்லை.
சாதனையின் சிறப்பம்சங்கள்:
- மெகா சாதனையாக இந்த ஒரு மாதத்தில் மட்டும் பேஸ்புக் தளம் 1ட்ரில்லியன் Pageviews பெற்று யாராலும் அசைக்க முடியாத சமூக தளம் என்று மீண்டும் நிருபித்து காட்டியுள்ளது.
- 870 மில்லியன் வாசகர்களால் 1 ட்ரில்லியன் Pageviews பெறப்பட்டுள்ளது.
- தனிப்பட்ட ஒரு வாசகரால் ஒரு மாதத்தில் 1194 பக்கங்கள் பார்க்க படுகிறதாம். இரண்டாவது இடத்தில் உள்ள யூடியூபில் ஒரு மாதத்திற்கு 126 பக்கங்கள் மட்டுமே பார்க்க படுகிறதாம்.
- பேஸ்புக் வாசகர்கள் ஒரு மாதத்தில் பேஸ்புக் தளத்தில் 700 மில்லியன் நிமிடங்களை செலவிடுகிரார்களாம்.
- ஒரு ட்ரில்லியன் என்பது சாதாரண மல்ல ஒரு ட்ரில்லியன் ரூபாய் நோட்டுக்குக்களை மேலே மேலே அடுக்கினால் சுமார் 68000 மைல் சென்று விடுமாம். நம்ப முடிகிறதா!!!!
0 comments:
Post a Comment