Sunday, August 21, 2011

நுரையீரல் புற்றுநோயை கண்டறியும் மோப்ப நாய்கள்: ஆய்வாளர்கள் முயற்சி

மனிதர்களின் சிறந்த நண்பனாக நாய்கள் திகழ்கின்றன. இவை தங்களது எஜமானர்களுக்கு மிகவும் நன்றியுடனும், விசுவாசமாகவும் உள்ளன.
எனவே நாய்களை கொண்டு மனிதர்களின் நுரையீரல் புற்று நோயை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஜேர்மனியில் உள்ள ஸ்கில்லர் ஜோக் ஆஸ்பத்திரியின் நிபுணர்கள் நாய்களின் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அவை தனது மோப்ப சக்தி மூலம் மனிதர்களின் மூக்கு வழியாக வெளியேறும் சுவாசத்தின் மூலம் நுரையீரல் புற்று நோயை கண்டறிய முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் நோய் அறிகுறி தொடங்கும் நிலையில் உள்ள 71 சதவீதம் பேரின் நுரையீரல் புற்று நோயை தெரிந்து கொள்ள முடியும். அதற்கு முன்னோடியாக புற்று நோய் சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகளை மோப்பம் பிடிக்க செய்து பயிற்சி அளித்தனர்.
நுரையீரல் புற்று நோயை கண்டுபிடிக்க 2 ஜெர்மன்ஷெப்பர்டு, அவுஸ்திரேலியன் ஷெப்பர்டு, மற்றும் லாப்ராடர் ரக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment