Sunday, August 21, 2011

பழங்காலத்தை சேர்ந்த அரிய வகை ஈல் மீனினம் கண்டுபிடிப்பு

மிக பழங்காலத்தை சார்ந்த ஈல் மீன் வகையை பாலே குடியரசு கடற்கரைப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈல் மீன் உடல் மிக ஒல்லியாகவும் சிறிய துடுப்புகளையும் கொண்ட ஆதிகால மீன் வகையாகும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீன் முந்தய காலத்தில் வாழ்ந்த மீனின் உடலியல் அமைப்பைக் கொண்டதாக உள்ளது.

இந்த மீன் இனத்தில் இதர 19 குடும்ப வகைகள் மற்றும் 800 ஈல் வகை மீன்களில் காணப்படாத அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த புதிய ஈல் மீன் ஆய்வுக் கண்டுபிடிப்பு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி றொயல் சொசைட்டி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பழங்கால மற்றும் தற்போது உள்ள ஈல் மீன் இனத்தின் இரு அம்சங்களும் பாலே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட மீனில் காணப்பட்டன. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தய ஈல் மீன் இன பண்புகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீன் வகையில் தெரியவந்துள்ளது. ஸ்மித்சோனிசன் தேசிய அருங்காட்சியக ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

0 comments:

Post a Comment