லேட்டஸ்ட் வீடியோகேம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்வை திறன் குறைந்தவர்களுக்கான அதிநவீன கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது.
வீடியோகேம்
விளையாடுவதற்கு மவுஸ், ஜாய் ஸ்டிக் போன்றவை தேவை. மைக்ரோசாப்ட்
நிறுவனத்தின் "கைநெக்ட் எக்ஸ் பாக்ஸ் 360" வீடியோ கேம் பிளேயருக்கு இதுபோல
எந்த டிவைஸ்களும் தேவையில்லை.
கணணி அல்லது தொலைக்காட்சியில் கேமை ஓடவிட்டு எதிரே நாம் நின்றால்
போதும். உதாரணத்துக்கு கார் ஓட்டும் விளையாட்டு என்றால் கற்பனையில் காரின்
ஸ்டீரிங்கை பிடித்து ஓட்டுவது போல பாவ்லா செய்தால் போதும்.
கிரிக்கட் கேம் என்றால் கற்பனையாக பேட் பிடிக்கலாம். இதற்காக எக்ஸ்
பாக்ஸ் கருவியுடன் பிரத்யேக லேசர் கமெராவும் உள்ளது. நம் உடல் அசைவை இந்த
கமெராக்கள் துல்லியமாக கண்காணிக்கும்.
இந்த சூப்பர் தொழில்நுட்பம் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி வேறு
வகையிலும் பயன்பட வேண்டும் என்று யோசித்தனர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
தீவிர முயற்சிக்கு பிறகு "பயோனிக் ஸ்பெக்டகிள்ஸ்" என்ற கண்ணாடியை
கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சி டீமில் உள்ள நரம்பியல் நிபுணர்
ஸ்டீபன் ஹிக்ஸ் கூறியதாவது:
இந்த மூக்கு கண்ணாடியுடன் நுண்ணிய கமெரா உள்ளது. அதனுடன் பாக்கெட் கணணி ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும்.
சாதாரண கண்ணாடி போல இதை போட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு முன்பு
இருக்கும் அனைத்தையும் இந்த கமெரா தொடர்ந்து கண்காணிக்கும். வேகத் தடை,
மின்கம்பம் போன்ற திடீர் தடைகள் இருந்தாலோ, யாராவது எதிரே நடந்து வந்தாலோ,
பஸ் போன்ற வாகனங்கள் கடந்தாலோ அந்த அசைவை வைத்து அதை கண்டுபிடிக்கும்.
இத்தகவல் பாக்கெட் கணணிக்கு தெரிவிக்கப்படும். கணணியில் இருந்து "எதிரே தடை இருக்கிறது. கவனமாக செல்லவும்" என சிக்னல் வரும்.
முற்றிலுமாக பார்வை இழந்தவர்கள் இக்கண்ணாடியை பயன்படுத்த முடியாது.
பார்வை திறன் குறைந்தவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும். பஸ் நம்பர்,
கடை, வாகனங்களின் எண் போன்றவற்றைக்கூட அவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
மற்றவர்களின் துணையின்றி விருப்பப்பட்ட இடங்களுக்கு செல்லலாம். மிகமிக
குறைந்த செலவில் இதை உருவாக்கி இருப்பது இன்னொரு சாதனை. அடக்க விலை ரூ.74
ஆயிரம் மட்டுமே. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு 2014ல் இது வெளிவரும் என்று
தெரிகிறது.
0 comments:
Post a Comment