அதை அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக நிபுணர் ஜான் ஏ.ரோஜர்ஸ் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த தோல் எலக்ட்ரானிக் கலவையால் தயாரிக்கப்பட்டது. மனிதனின் தலை முடியை விட மிகவும் மெலிதானது. இதை பாலியஸ்டரால் பேக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த எலக்ட்ரானிக் தோல் பசை போன்று ஒட்டிக் கொள்ளக்கூடியது. அதை நோயாளியின் மணிக்கட்டில் டாட்டூ(பச்சை குத்துதல்) போன்று 24 மணி நேரம் அதாவது ஒருநாள் முழுவதும் ஒட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த தோல் நோயாளியின் உடல் வெப்பநிலை, இதய துடிப்பு போன்ற உடல் நிலையை கணக்கிட்டு அறிவிக்கும். உடலில் உள்ள உணர்வுகள் மூலம் இவை கண்டறியப்படுகிறது.
இதன் மூலம் மூலையின் அதிர்வுகள், தசைகளின் இயக்கம், உடலில் இருந்து வெளியேறும் வெப்பம், பேச்சின் தன்மை போன்றவற்றை கண்டுபிடிக்க முடியும். மேலும் காயத்தின் தன்மையை அறிந்து அவற்றை குணப்படுத்தவும் இது உதவும்.
0 comments:
Post a Comment