Sunday, September 18, 2011

இரண்டு சூரியன்களை கொண்ட கிரகம் கண்டுபிடிப்பு

நமது பூமிக்கு ஒரு சூரியனும், ஒரு நிலாவும் உள்ளது. பகலில் சூரிய வெளிச்சத்தையும், இரவில் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிலாவின் ஒளியையும் பெறுகிறோம்.

அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி மையத்தின் கெப்ளர் டெலஸ்கோப்பில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகமானது நமது பூமியிலிருந்து 200 ஒளிஆண்டு தொலைவில் அமைந்துள்ளது. இந்த புதிய கிரகத்திற்கு கெப்ளர்-16பி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இந்த கிரகம் 2 சூரிய அஸ்தமனங்களைப் பெறக்கூடியதாக உள்ளது. கெப்ளர்-16பி கிரகத்தின் 2 சூரியன்களும் நமது பூமியில் உள்ள சூரியனை விட அளவில் சிறியதாக இருக்கின்றன.
இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கிரகம் தனது இரண்டு சூரியன்களையும் 229 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.

0 comments:

Post a Comment