வீனஸ் கோளில் பூமியை விட 100 மடங்கு மெல்லிய ஓசோன் அடுக்கு உள்ளதாக ஐரோப்பிய விண் ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்து உள்ளது.
இதுவரை பூமியிலும், செவ்வாயிலும் மட்டுமே ஓசோன் அடுக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
வீனஸின் வளி மண்டலத்தை ஊடுருவி தொலைவில் உள்ள விண்மீனை ஆய்வு செய்த போது அந்த விண்மீன்
எதிர்பார்த்ததைவிட மங்கலாக தெரிந்தது.
அதற்கு காரணம் வீனஸில் உள்ள ஓசோன் மண்டலம் தான் என்பது
கண்டறியப்பட்டது. அந்த வின்மீனின் ஒளியில் உள்ள அல்ட்ரா ஒளிளை வீனஸின்
ஓசோன் மண்டலம் வடிகட்டியது தான் அந்த விண்மீன் ஒளி மங்கலுக்கு காரணம்.
வீனஸின் ஓசோன் மூலக்கூறில் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் உள்ளன. இது சூரிய
ஒளி அந்த மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உடைப்பதால் ஏற்பட்டு உள்ளது.
வீனஸில் உள்ள ஓசோன் அடுக்கு பூமியில் உள்ளதைப் போன்று 3 மடங்கு உயரத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment