ஒருவர் நித்திரை கொள்ளும் போது கனவில் காண்பதனை எல்லாம் நினைவில் வைத்திருப்பது என்பது மிகக் குறைவாகவே இருக்கும்.
ஆனால்
தற்போது மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தாம் கண்ட
கனவுகளை இஸ்கான் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கின்றனர்.
கணணிகளின் உதவியுடன் நாம் ஏற்கனவே கண்ட கனவுகளை பின்னர் தெளிவாக
தெரிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை என இத்துறையை ஆய்வு செய்த
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஒருவர் கண்ட கனவினைக் கட்டுப்படுத்த முடியுமானால் அத்தகைய கனவுகளை
மீண்டும் பார்க்கலாம் என ஜேர்மனியின் மக்ஸ் பேங் நிறுவனம் கூறுகிறது.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனுடைய எண்ணங்களை வாசிக்கக்கூடிய
இயந்திரத்தால் மனிதன் கண்ட கனவுகளையும் பார்க்கலாம் எனத் தெரிவிக்கிறது.
நாங்கள் நினைவோடு செய்யும் காரணிகளை கனவில் காணும்போது மூளையும் நினைவில் கண்ட விதத்திலே இஸ்கேனில் காட்டும் என அறியவந்துள்ளது.
கனவில் காணும் நகரும் பிரதி பிம்பங்களைக் காணலாம் என விலங்கியல் விஞ்ஞானிகள் தமது ஆய்வின்போது குறிப்பிட்டுள்ளனர்.
நித்திரை கொள்பவர்கள் தமது கைகளைப் பிடித்து இருக்கும்போது காட்டபடும்
அதே அமைப்பில் கனவில் காணும்போதும் பிடிக்கப்பட்ட கைகள் போன்று காட்சி
தருமென்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment