Saturday, October 22, 2011

குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

டான்சில் மற்றும் குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு இதயநோய் வருவதற்கான சூழ்நிலைகள் அதிகம் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுவீடனில் டான்சிலால் பாதிக்கப்பட்ட 5,500 பேரும், குடல் இறக்கத்தால் பாதிப்பட்ட 2,800 பேரும் இந்த மருத்துவ ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டனர்.
அதில் டான்சிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 44 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு 33 சதவீதம் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதாம்.
ஒரே நபருக்கு டான்சில் மற்றும் குடல் இறக்க பாதிப்பு இருந்தால் மிக அதிக அளவில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐரோப்பிய இதயநோய் ஆய்வுப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment