Saturday, October 22, 2011

கழிவின் மூலம் இயங்கும் வண்டி: ஜப்பான் ஆய்வாளர்களின் அரிய கண்டுபிடிப்பு

ஜப்பானில் டாய்லெட், வாஷ்பேசின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் டொடோ.
இந்நிறுவனம் டாய்லெட் பைக் நியோ என்ற பெயரில் 3 சக்கர பைக்கை உருவாக்கியுள்ளது. இதில் பயோகேஸில் இயங்கும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ஆடு, மாடு, நாய், குதிரை உள்ளிட்ட விலங்குகளின் சாணத்தை தண்ணீரில் கரைத்து இதில் ஊற்ற வேண்டும். சாணத்தில் இருந்து பயோகேஸ் உருவாகி அதன் மூலம் இன்ஜின் இயக்கப்படுகிறது.
இதுபற்றி டொடோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வீடுகளில் கழிவறை தொட்டியில் உற்பத்தியாகும் வாயுக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. இதை தடுக்கும் ஆராய்ச்சியில் டொடோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் அதிகம் மாசுபடுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரத்யேக வாகனம் தயாரித்துள்ளோம். தொழில் ரீதியாக உற்பத்தி செய்யும் எண்ணம் இல்லை.
நியோ பைக் 80 கி.மீ. வேகம் வரை போகிறது. பைக் சீட் உள்பட பல பாகங்கள் கழிவறை சாதனங்கள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன. கோக்குரா நகரில் உள்ள தொழிற்சாலையில் தயாரான இந்த பைக் பிரசார பயணமாக ஜப்பான் முழுவதும் சுற்றி வருகிறது.

0 comments:

Post a Comment