எமெட் ரென்சின் மற்றும் அலெக்ஸ் அகிமென் என்ற மாணவர்கள் டிவிட்டர் மற்றும்
இலக்கிய ஆர்வம் இரண்டையும் இணைத்து அதனோடு இளமையின் குறும்பையும் சேர்த்து
உலக இலக்கியத்தை எல்லாம் 20 குறும்பதிவுகளில் அடக்கி விட்டனர்.
உலக
பெருங்கவி ஷேக்ஸ்பியரில் இருந்து நாவல்களின் பேரசர் தாஸ்தவகி வரை
புகழ்பெற்ற படைப்பாளிகளின் நாவல்களையும் கதைகளையும் சுருக்கி 20
குறும்பதிவுகளாக கொடுத்துள்ளனர்.
அதாவது கதை சுருக்கத்தை தருவது போல இந்த இருவரும் நாவல்களின் சாரம்சத்தை டிவிட்டர் பதிவுகளாக்கினர்.
டால்ஸ்டாய் போன்ற மேதைகளின் புத்தகத்தை படிக்கும் அளவுக்கு
இளையதலைமுறைக்கு பொருமை இல்லை என்று ரொம்ப நாளாக சொல்லப்பட்டு வருகிறது.
டிவிட்டர் யுகத்தில் கேட்கவே வேன்டாம். இன்றைய தலைமுறையின் பொறுமை 140
எழுத்துக்கள் அளவு தான்.
எனவே பெரும் இலக்கியமாக இருந்தாலும் அது டிவிட்டர் வடிவில் கொடுக்கப்பட்டால் எல்லோரையும் கவர்ந்துவிடும்.
ஷேக்ஸ்பியர் நாயகன் ஹாம்லெட் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொள்ள
பக்கம் பக்கமாக படிக்கும் பொறுமை எத்தனை பேருக்கு இருக்கும். அதையே பத்து
குறும்பதிவுகளாக தந்துவிட்டால்? அதுவும் ஹாம்லெட்டே டிவீட் செய்வது போல
இருந்தால் எப்படி இருக்கும்? அதை தான் இந்த இருவரும் செய்தனர்.
நாவல்களை சுருக்கியதோடு கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்து சுவையாக
குறும்பதிவுகளாக்கினர். இந்த பதிவுகள் படிக்க சுவாரஸ்யமாக இருப்பதோடு
படைப்புகளின் சாரம்சத்தியும் புரிய வைத்து விடுகின்றன.
இந்த இளைஞர்களின் குறும்பதிவுகள் வெளியான போது பெரும் கவனத்தைப் பெற்றன.
இந்த பதிவுகள் டிவிட்டரில்லகியம் என்றும் வர்ணிக்கப்பட்டது, அதாவது
டிவிட்டரேச்சர். இதே பெயரில் பென்குவின் இவற்றை புத்தகமாக
வெளியிட்டுள்ளது.
இணையதள முகவரி
1 comments:
திருக்குறளைவிடவா பெரிய ட்விட் இலக்கியம் இருந்து விட போகிறது? நல்ல செய்தி நன்றி நண்பரே! http://vethakannan.blogspot.com/2011/12/blog-post_24.html
Post a Comment