Monday, December 5, 2011

PDF கோப்புகளை HTML பக்கமாக மாற்றுவதற்கு

பல நேரங்களில் நம்மிடம் இருக்கும் PDF கோப்புகளை எப்படி HTML பக்கமாக மாற்றலாம் என்று தேடிக்கொண்டிருப்போம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.PDF கோப்புகளை திறந்து கொப்பி செய்து தான் HTML பக்கம் உருவாக்குவோம். ஆனால் நேரடியாக PDF கோப்புகளை HTML கோப்பாக மாற்ற ஒரு மென்பொருள் உதவி புரிகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் PdfMasher என்ற டூலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற அனைத்து இயங்குதளத்திற்கும் துணை செய்யும் வகையில் இந்த டூல் உருவாக்கப்பட்டுள்ளது.
எந்த பக்கத்தை முகப்பு பக்கமாக வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி எங்கெங்கு என்னென்ன தகவல்கள் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்தாலே போதும் சில நிமிடங்களில் எளிதாக நாம் HTML பக்கம் உருவாக்கலாம்.
இணையதள முகவரி

0 comments:

Post a Comment