பொதுவாக மீடியா பிளேயரில் நாம் திரைப்படங்களை மட்டும் பார்ப்போம் அல்லது பாடல்கள் போன்றவற்றை கேட்போம்.
ஆனால் படங்களை அல்லது பாடல்களை நமக்கு வேண்டிய அளவில் மாற்றம் செய்து கொள்ள அதற்கென்று உள்ள சில மென்பொருளை மட்டுமே நாடுவோம்.
இது போன்ற வசதி நாம் பயன்படுத்தும் மீடியா பிளேயரில் இருக்கும். ஆனால் நாம் அதை பயன்படுத்தி இருக்க மாட்டோம்.
1. உங்கள் கணணியில் வி.எல்.சி மீடியா பிளேயரை திறந்து கொள்ளுங்கள்.
2. அதில் மீடியா என்ற ஆப்சனை தெரிவு செய்து அதில் Convert and Save என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
3. அடுத்து அதில் கிடைக்கும் புதிய விண்டோவில் நாம் படங்களை கணணியில்
சேமித்து வைத்து இருந்தால் ADD என்பதையும், இல்லை எனில் சீடிகளில்
இருந்தால் தேவைக்கு ஏற்பவும் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
4. படத்தை தெரிவு செய்துவிட்டு நாம் மாற்றம் செய்யும் படமானது எங்கு
போய் பதிய வேண்டும் என்பதையும், எந்த அளவில் படமானது மாற்றம் செய்யப்பட
வேண்டும் என்பதையும் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் நீங்கள் தெரிவு செய்த படங்களானது மாற்றம் செய்யப்பட்டு கணணியில் பதியப்பட்டிருக்கும்.
0 comments:
Post a Comment