பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட பிறிதொரு சமூக
வலைத்தளமான கூகுள் பிளஸ் நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகின்றது.
அதன்
அடிப்படையில் புதிதாக பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களில் Text
புகுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தேவையான
Text-ஐ தமிழிலும் எழுத முடியும்.
1. கீழே படத்தில் காட்டியவாறு நீங்கள் விரும்பிய படம் ஒன்றை பதிவேற்றம் செய்யவும்.
2. அடுத்து Addtext என்ற பட்டனை அழுத்தவும், இதன் போது புதிய சாளரம்(window) தோன்றும்.
3. அதில் நீங்கள் விரும்பிய Text-ஐ தட்டச்சு செய்யவும்.
4. தமிழில் எழுதவிரும்பின் கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.
5. அதன்பின் Save பட்டனை அழுத்தியபின் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும் வாட்டமார்க்-ஐ உருவாக்குவதற்காகவும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தமுடியும் என்பது சிறப்பம்சமாகும்.
0 comments:
Post a Comment