Sunday, February 19, 2012

ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை

இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி முறையில் ஸ்கிரீன்ஷாட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.

300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் முழுதிரையோ அல்லது தேவையான அளவு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். தேவையான அளவினை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு சிகப்பு நிற கட்டம் வரும். அதில் கர்சரை வைத்து ஒரங்களை நகர்த்துவது மூலம் உங்களுக்கு தேவையான அளவினை நிர்ணயித்துக்கொள்ளலாம்.

JPG.PNG.BMP என் எந்த பார்மெட்டில் புகைப்படம் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளலாம். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்கையில் உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் தேவையானதை தெரிவு செய்துகொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment