முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற
போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய
வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இம்முப்பரிமாண மென்பொருட்களில் இறுதியாக
அறிமுகப்படுத்தப்பட்ட Bryce 7 Pro என்ற மென்பொருள் மிகச்சிறந்த முறையிலும்
இலகுவாகவும் முப்பரிமாண உருவங்களை வடிவமைக்கக் கூடியவாறு
உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் பெறுமதி 249.95 அமெரிக்க டொலர்களாகும்.
இருந்தும் எதிர்வரும் பெப்ரவரி 29ம் திகதிவரை இம்மென்பொருளையும் அதன்
Licence Key ஐயும் DAZ 3D என்ற இணையத்தினூடு இலவசமாக பெற்றுக்கொள்ள
முடியும்.
பின்வரும் படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்களும் இலவசமகா குறித்த மென்பொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
1. DAZ 3D (https://www.daz3d.com/i/newaccount/0) இணையத்தளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கவும்.
2. இங்கு அழுத்துவதன் மூலம்(http://www.daz3d.com/i/3d-models/-/bryce-7-pro?item=11034) மென்பொருளை இலவசமாக வழங்கும் இணையப்பக்கத்திற்கு செல்லவும்.
3. அப்பக்கத்தில் காணப்படும் Add To cart என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
4. பின் checkout என்பதை அழுத்தி தரப்படும் கட்டளைகளை பின்பற்றுவதன்
மூலம் மென்பொருளை தரவிறக்கம் செய்யும் இணைப்பையும், Licence Key ஐயும்
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற முடியும்.
0 comments:
Post a Comment